ஆக்சிஜன் விநியோகம்…பிரதமர் மோடி தலைமையில் இன்று அவசர கூட்டம்!

 

ஆக்சிஜன் விநியோகம்…பிரதமர் மோடி தலைமையில் இன்று அவசர கூட்டம்!

கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவில் நேற்று ஒருநாளில் 3,29,942 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இதன் மூலம்,
மொத்த பாதிப்பு 2,29,92,517 ஆக அதிகாரித்துள்ளது. அத்துடன் ஒரேநாளில் 3,876 பேர் உயிரிழந்த நிலையில்
மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,49,992 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 3,56,082 பேர் குணமாகியுள்ள நிலையில் 37,15,221 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆக்சிஜன் விநியோகம்…பிரதமர் மோடி தலைமையில் இன்று அவசர கூட்டம்!

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஆக்சிஜன் விநியோகம், தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.முன்னதாக இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறைவு உள்ளிட்ட அவலநிலைகளால் பல உயிர்கள் பரிதாபமாக பலியாகி வருகிறது. இதனால் இதை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் இன்று நடைபெறுகிறது.