தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்களுக்காக ரூ.61 கோடி ஒதுக்கீடு

 

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்களுக்காக ரூ.61 கோடி ஒதுக்கீடு

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைக்கு கடந்தாண்டு மேற்கொண்ட பணிக்கு ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.65 கோடி, மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்களுக்காக ரூ.61 கோடி ஒதுக்கீடு

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அமைக்கவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மற்றும் தமிழகம் முழுவதுமுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நோய் தொற்று விகிதத்தை 5 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வரவும் ஆட்சியாளர்களுக்கு தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அறிவுறுத்தியுள்ளார்.