தமிழகத்திற்கு காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.116.5 கோடி ஒதுக்கீடு: மத்திய நிதியமைச்சகம்

 

தமிழகத்திற்கு காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.116.5 கோடி ஒதுக்கீடு: மத்திய நிதியமைச்சகம்

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டின் தலைநகரமான டெல்லி காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பெருகி வரும் வாகனங்கள் எண்ணிக்கை, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, மாநில எல்லை பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படுவது போன்ற காரணங்களால் டெல்லியில் காற்று மாசு அடைகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் டெல்லிவாசிகள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்திற்கு காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.116.5 கோடி ஒதுக்கீடு: மத்திய நிதியமைச்சகம்

டெல்லிக்குதான் அந்த நிலைமை என்றால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் காற்றின் தரம் மோசமாகியுள்ளது. மத்திய அரசு காற்று மாசுவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்று அதிகம் மாசு அடையும் என்பதால் பாரம்பரிய வெடிகளை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்

இந்நிலையில் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த 15 வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி நிதி ரூ.2,200 கோடியும், தமிழகத்திற்கு தமிழகத்திற்கு ரூ.116.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு ரூ. 90.5 கோடியும், மதுரைக்கு ரூ.15.5 கோடியும், திருச்சிக்கு ரூ.10.5 கோடியும் நிதியமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.