ஈரோடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக 40 ஆக்சிஜன் படுக்கைகள் செயல்பாட்டிற்கு வந்தன!

 

ஈரோடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக 40 ஆக்சிஜன் படுக்கைகள் செயல்பாட்டிற்கு வந்தன!

ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் கூடுதலாக 40 ஆக்சிஜன் படுக்கைகள், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் செயல்பாட்டினை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக 40 படுக்கை செயல்பாட்டிற்கு வந்துள்ளதால், ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்து உள்ளதாகவும், இது 10 நாட்களில் 250 ஆக உயர்த்த நடவடிகை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நோயாளிகளின் உறவினர்கள் தங்க இடவசதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,550 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தும் பணி தற்போது நடந்து வருவதாகவும், இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக 40 ஆக்சிஜன் படுக்கைகள் செயல்பாட்டிற்கு வந்தன!

மேலும், பி.என்.ஐ அமைப்பு மூலம் வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தியுடன் செறிவூட்டும் இயந்திர செயல்பாடு துவங்கி உள்ளதாகவும், இதன் மூலம் 40 நோயாளிகளுக்கு 24 மணிநேரமும் ஆக்சிஜன் வழங்க முடியும் என்றும் கூறினார். மேலும், இதனை 100 படுக்கைகளுக்கு வழங்கும் வகையில் தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை தருவதில் சிக்கல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என கூறிய அவர், நோயாளிக்கு சிகிச்சை தர தாமதம் செய்யக்கூடாது என்றும், இப்பிரச்னையை தீர்க்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.