• April
    07
    Tuesday

Main Area

Main



ட்ரம்புக்கு கேக் ஊட்டும் பிரதமர் மோடி!

Amul welcomes Donald Trump
Amul welcomes Donald Trump

அரசுமுறை பயணமாக இந்தியா வந்த டொனால்டு ட்ரம்பை கெளரவிக்கும் விதமாக அமுல் நிறுவனம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப், முதல்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்தார். தனது மனைவி மெலானியா, மகள் இவாங்காவுடன் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வந்திறங்கிய ட்ரம்பை, மோடி ஆரத்தழுவி வரவேற்றார். 
அதன் பின்னர் டிரம்ப் இணையருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் தனி வாகனம் மூலம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திற்கு சென்ற அவர்,  அங்கு நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலுக்கு சென்றுவிட்டு ஓய்வெடுப்பதற்காக தனது அறைக்கு திரும்பினார். 

pjAmul welcomes Donald Trump

இந்நிலையில் குஜராத் மாநில அரசால் நிர்வகிக்கப்படும், அமுல் பால் பொருட்கள் விற்பனை நிறுவனம், டிரம்பை வரவேற்கும் விதமாக, பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பிற்கு கேக்கை ஊட்டிவிடுவது போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.