பித்தளையில் பர்தா… மாணவர்கள் மீது புகார் கூறிய அலிகார் பல்கலைக் கழக மாணவி!

 

பித்தளையில் பர்தா… மாணவர்கள் மீது புகார் கூறிய அலிகார் பல்கலைக் கழக மாணவி!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக் கழகத்தில் சக மாணவியை பித்தளையில் பர்தா அணிந்து வரும்படி மாணவர் ஒருவர் வற்புறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பித்தளையில் பர்தா… மாணவர்கள் மீது புகார் கூறிய அலிகார் பல்கலைக் கழக மாணவி!உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் அலிகார் இஸ்லாமிய பல்கலைக் கழகம் உள்ளது. அங்கு பிஆர்க் பட்டப் படிப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தன்னை தன்னுடன் படிக்கும் சில மாணவர்கள் சமூக ஊடகங்கள் மூலமாக ஊரடங்கு முடிந்து பல்கலைக் கழகம் திறக்கும்போது பித்தளை புர்கா அணிந்து வர வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர் என்று போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பித்தளையில் பர்தா… மாணவர்கள் மீது புகார் கூறிய அலிகார் பல்கலைக் கழக மாணவி!இதைத் தொடர்ந்து மாநில மகளிர் ஆணையத்துக்கு இது குறித்து புகார் சென்றுள்ளது. அலிகார் போலீஸ் சூப்பிரெண்டை இது குறித்து விசாரிக்கும்படி மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.எஸ்பி கூறுகையில், “இளநிலை கட்டிடக்கலையியல் படிக்கும் மாணவி சில கல்லூரிகளில் பெண்கள் புர்கா அணிந்து வர கட்டாயப்படுத்துவது தொடர்பாக தன்னுடைய கருத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். அதற்கு அவருடன் படிக்கும் சில மாணவர்கள் சமூக ஊடகம் மூலமாகத் தவறாக பேசியுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் பிரச்னை காலத்திலிருந்து இந்த மாணவியை குறிவைத்து அவர்கள் பேசி வந்துள்ளனர். அவர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.