தூத்துக்குடியில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை..!
Oct 29, 2025, 09:32 IST
மதுரையில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு ரெயில், கோவில்பட்டி-கடம்பூர் இடையே வரும்போது ஒரு வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்டவருக்கு 35 வயது இருக்கும். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவரது இடது கையில் ரேவதி என்றும் வலது கையில் கதிர் என்றும் ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி ரெயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.