×

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்?- நயினார் நாகேந்திரன்

 

மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளை, மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் கருவிகளாக மாற்றி வைத்திருப்பது தான் திமுக அரசின் நாடு போற்றும் நல்லாட்சியா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூலில் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மதுரை மேயர் திருமதி. இந்திராணி பொன் வசந்த் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கடும் அதிர்ச்சியையும் பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. திமுக அமைச்சர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கக் கூடிய மதுரை முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் தடாலடியாக கைது செய்யப்படுவதையும், மேயர் கமுக்கமாக ராஜினாமா செய்வதையும் பார்த்தால், சிறிய மீன்களைப் பலியிட்டு பெரிய தலைகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுக்கிறது.