×

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ டீசர் வெளியீடு!

 

 விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான, ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியுடன் தபு, சம்யுக்தா துனியா விஜய் குமார், ஜரீனா வஹாப், விடிவி கணேஷ் மற்றும் பிரம்மாஜி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது அதிரடியான இசையால் பாராட்டுகளை பெற்றவர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலாவின் JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.

“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

.பூரி ஜகன்நாத்- விஜய் சேதுபதி முதன் முறை கூட்டணி அமைத்துள்ள இப்படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.

வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/1y3-Fl4ndp8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/1y3-Fl4ndp8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">