×

``இதையெல்லாம் ரீல்ஸ்ல தேடிட்டு இருக்க முடியாது''- விஜய் 

 

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எப்பவும் `Zero Tolerance' தான் அதுல உறுதியா இருக்கோம் என முதல்வர் விஜய் கூறினார்.


கடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை தொடர்பாக நடைபெறும்  நிகழ்ச்சிகளில் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை தவிர்த்து மற்றவர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை. ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின் போன்ற முதல்வர்கள்  போலீசார் நிகழ்ச்சியில் தனது தொண்டர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை. ஆனால் இன்று எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திங்கப் பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 1200 பேர் கலந்துகொண்டனர். மேலும் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் பங்கேற்றார். 

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் விஜய், “பெண்கள் பாதுகாப்புக்காக இந்தியாவிலேயே முதல் முறையாக டிரோன் மூலம் ரோந்து முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த குறுகிய காலத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படையை நடைமுறைக்கு கொண்டு வர கடுமையாக உழைத்த காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள். பெண்களுக்கு எதிரா இந்த கொடுமையெல்லாம் ஏன் நடக்குது, எதுக்கு நடக்குதுன்னு மத்தவங்க மாதிரி ரீல்ஸ், இன்ஸ்ட்டால தேடிட்டு இருக்க முடியாது ரியாலிட்டிய புரிஞ்சிக்கணும் இந்த பிரச்சனைய வேரோடு பிடுங்கி எறியனும்... தனி மனிதன் ஒழுங்கா இருந்தாலே நம்ம சமூகம் மாறிடும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எப்பவும் `Zero Tolerance' தான் அதுல உறுதியா இருக்கோம். பெண்களுக்கு எதிரான பிரச்சனை எல்லாம், மே 10ல இருந்து புதுசா மொளச்சி வரல. இது பல வருஷமா இருக்குற பிரச்சனை. இதை பலவருஷமா கண்டுக்காம விட்டது யார்னு.. நான் சொல்லித்தான் தெரியணும்னு அவசியம் இல்ல, உங்களுக்கே நல்லா தெரியும்” என்றார்.