“பாமக எல்லாம் ஒரு கட்சியே கிடையாது. நாங்க தான் ஆட்சியில் இருக்கிறோம்”- பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டிய தவெகவினர்
“பாமக எம்எல்ஏ கணேஷ் குமார் சொல்வதெல்லாம் கேட்கக் கூடாது. நாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம் நாங்கள் சொல்வது தான் செய்ய வேண்டும்” என அதிகார தோரணையில் த.வெ.க மாவட்ட செயலாளர் பேசியதால் செஞ்சியில் பாமக- த.வெ. க. நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
”பா.ம.கவுக்கு இங்க வேலையே கிடையாது, அவங்க வெறும் எம்.எல்.ஏ மட்டும்தான்.. ஆட்சி எங்க கிட்டதான் இருக்கு.. நாங்க சொல்றதை கேக்கணும்”.. அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரை த.வெ.க மாவட்ட செயலாளர் மிரட்டும் தொனியில் பேசியதாக பரவும் பரபரப்பு வீடியோ.!#Viluppuram | #PMK | #TVK |… pic.twitter.com/AUDVHQCT7p
— Polimer News (@polimernews) June 9, 2026
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார்அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு தனது கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளார் இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின்விழுப்புரம் வட மேற்கு மாவட்ட கழக செயலாளர் குணா சரவணன் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஜெயந்தியை சந்தித்து பேசி உள்ளார் . அப்போது பாமக எல்லாம் ஒரு கட்சியே கிடையாது. நாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம், செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் சொல்வதையெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது என அதிகார தோரணையில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி இடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பாமகவினர் 70 க்கும் மேற்பட்டடோர் செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் உள்ள த. வெ. க. மாவட்ட செயலாளர் குணா சரவணன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்