×

10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கைது

 

மதுரை கீழமாத்தூர் பகுதியில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

​மதுரை மாவட்டம், கீழமாத்தூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (21), தனது பாட்டி வீட்டில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து, அக்கட்சியின் நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறார். ​இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்று, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. 

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், கண்ணனைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், தவெக நிர்வாகி கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக,  தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், கொலை மற்றும் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.