×

ரயில் விபத்து- சிக்னல் கோளாறு காரணம்

 

சென்னை அருகே திருவள்ளூரில்  நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து பீகார் நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ரயில் பெட்டிகள் தீ பற்றி தெரிந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தவறான சிக்னல் காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு 8.27 மணியளவில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதால் ரயில் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 109 கி.மீ. வேகத்தில் சென்ற ரயிலை லூப் லைனில் செல்லும்போது 90 கி.மீ வேகத்திற்கு ஓட்டுநர் குறைத்துள்ளார். பிரதான் லைனில் இருந்து லூப் லைனிற்கு சென்றபோது நின்றுக்கொண்டு இருந்த சரக்கு ரயிலில் மோத் விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 6 பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்தன. விபத்து நடந்த கவரைப்பேட்டை பகுதிக்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் தேசிய மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து இன்று காலை 10.34 மணிக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. 8 மாநிலங்கள் வழியாக இந்த ரயில் பயணம் செய்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், உத்திரப் பிரதேஷ் வழியாக பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா சென்றடையும். இந்த ரயில் சுமார் 3035 கிலோமீட்டர் பயணிக்கிறது குறிப்பிடதக்கது.