திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் தவறு இருந்தால் கடும் நடவடிக்கை- அமைச்சர் அருண்ராஜ்
திருச்சி செவிலியர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக் குழுவின் அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் காவிரி, திருமணிமுத்தாறு, பொன்னியாறு இணைப்பு திட்டம் குறித்த ஆலோசனை ஒன்றிய அலுவலகத்தில் நடபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உள்ளிட்டோர் விவசாயிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் போது ஏரிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் நிரப்புவது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கி கூறினர். விவசாயிகளும் தங்களுடைய கருத்துகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரின் கருத்துகளையும் கலந்தாலோசித்து முறையான திட்ட வரைவு மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உயர்மட்ட மருத்துவக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட அமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன், அந்தப் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், மாணவியின் சகோதரிக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கான அரசாணையும் வழங்கினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் எப்போதும் அவர்களுக்குத் துணையாக இருப்போம். இந்த விசாரணை நேர்மையான முறையிலும் வெளிப்படையாகவும் நடைபெறும். தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக் குழுவின் அறிக்கை இன்னும் இரண்டு நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்த ஆலோசனை
இன்று திருச்செங்கோட்டில், தேர்தலுக்கு முன்னதாக வாக்குறுதியாக அளிக்கப்பட்ட காவிரி, பொன்னியாறு, திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விவசாய அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் இத்திட்டத்திற்கான வழித்தடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள மேட்டூர் - சரபங்கா உபரிநீர் திட்டத்தின் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால், ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருக்கும் என விவாதிக்கப்பட்டது. இதனால், காவிரி ஆற்றில் இருந்து ஒரு புதிய திட்டத்தின் மூலம் மங்கலம் ஏரிக்குத் தண்ணீரைக் கொண்டு வந்தால் அனைத்து ஏரிகளும் முழுமையாகப் பயன்பெறும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கான புதிய முன்மொழிவை தயார் செய்யுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளேன். அந்த அறிக்கை வந்தவுடன், நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நம்ம மாவட்ட ஆட்சியர்கிட்ட அதைப் பத்திப் பேசியிருக்கேன். அது என்ன காரணம் அப்படிங்கறதத் தெரிந்தவுடன், அதற்கான என்ன உரிய நடவடிக்கை எடுக்கத் தேவைப்பட்டால் எடுக்கப்படும். இந்த அரசு அமைந்தவுடன் முதலமைச்சர் அவர்கள் என்ன உத்தரவிட்டுருக்காங்கன்னா, மருத்துவ சேவை கண்டிப்பாக அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை அனைத்து மக்களுக்கும் கிடைக்கணும்னு உத்தரவிட்டுருக்காரு. குறிப்பா இந்த மகப்பேறு சேவை 24 மணி நேரமும் இயங்கும். கண்டிப்பாக இயங்கணும்கிறதுதான் அந்த சீமாங் மையங்கள் மாதிரி அமைப்புகள்லாம் இருக்காங்க. அது எங்கெங்க இடைவெளிகள் இருக்கோ, எங்கெங்க பற்றாக்குறை இருக்கோ அது கண்டறியப்பட்டு அதுவும் சரி செய்யப்படும். அதை விசாரிச்சுட்டு, அந்த மாதிரி தவறு நடந்திருக்கும் பட்சத்தில் நம்ம நடவடிக்கை எடுப்போம்” என கூறினார்.
TIRUCHENGODE MINISTER ARUNRAJ AALOSANAI