"ஜி பூம்பா போடுறதுக்கு... முதல்வர் விஜய் ஒன்றும் மந்திரவாதி அல்ல! " - திருநாவுக்கரசர்
புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் ஒன்றும் மந்திரவாதி அல்ல, வந்தவுடனேயே கையை தூக்கி எல்லாவற்றையும் உடனே மாற்றிவிட முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் ஒன்றும் மந்திரவாதி அல்ல, வந்தவுடனேயே கையை தூக்கி எல்லாவற்றையும் உடனே மாற்றிவிட முடியாது. புதிய மருமகள் வீட்டிற்குள் வந்தவுடன் அஞ்சறை பெட்டி எங்குள்ளடு என்பதை தெரிந்து கொள்ளவே சில காலம் பிடிக்கும். அமைச்சரவையில் உள்ள பலரும் புதியவர்கள் என்பதால், புதிய அரசுக்கு குறைந்தபட்ச கால அவகாசம் கொடுக்காமல் அதற்குள்ளாகவே அவசர அவசரமாக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது நியாயமல்ல. இந்த அரசு ஆட்சியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை; அதற்குள் பலருக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கியுள்ளது. இவ்வளவு காலம் ஒன்றாக இருந்து விட்டு கூட்டணியில் இருந்து விலகியவுடன் தரக்குறைவாக பேசுவது அரசியல் அநாகரிகம். கருத்து சுதந்திரத்திற்கும் ஒரு அளவு உள்ளது” என்றார்.