தேர்வு கிடையாது..! ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வேலை..!
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர், கூர்க்கா, திருவலகு, கால்நடைப் பராமரிப்பாளர், சன்னதி உடல், வீரவண்டி, சேமக்களம் வாத்தியங்கள், தாயார் சன்னதி வாத்தியங்கள், உதவி யானைப்பாகன், சலவையாளர், மற்றும் கூட்டுபவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
| Description | Details |
| வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை 2025 |
| துறைகள் | தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் |
| காலியிடங்கள் | 31 |
| பணிகள் | இளநிலை உதவியாளர், கூர்க்கா, திருவலகு, கால்நடைப் பராமரிப்பாளர், சன்னதி உடல், வீரவண்டி, சேமக்களம் வாத்தியங்கள், தாயார் சன்னதி வாத்தியங்கள், உதவி யானைப்பாகன், சலவையாளர், மற்றும் கூட்டுபவர் |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 25.11.2025 |
| பணியிடம் | திருச்சிராப்பள்ளி மாவட்டம்- தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://tiruttanimurugan.hrce.tn.gov.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு-இந்து சமய அறநிலையத்துறை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி (Post) | காலியிடங்கள் (Vacancies) |
| இளநிலை உதவியாளர் | 10 |
| கூர்க்கா | 02 |
| திருவலகு | 04 |
| கால்நடை பராமரிப்பாளர் | 02 |
| பெரிய சன்னதி உடல் | 01 |
| பெரிய சன்னதி வீரவண்டி | 01 |
| பெரிய சன்னதி சேமக்களம் மற்றும் இதர வாத்தியங்கள் | 01 |
| தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள் | 01 |
| உதவி யானைப்பாகன் | 02 |
| சலவையாளர் | 01 |
| கூட்டுபவர் | 06 |
கல்வித் தகுதி
| பதவி (Post) | கல்வித் தகுதி (Qualification) |
| இளநிலை உதவியாளர் | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
| கூர்க்கா | தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். |
| திருவலகு | தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். |
| கால்நடை பராமரிப்பாளர் | தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். |
| பெரிய சன்னதி உடல் | 1. தமிழில் படிக்க/எழுத தெரிந்திருக்க வேண்டும். 2. அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளியில் தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
| பெரிய சன்னதி வீரவண்டி | 1. தமிழில் படிக்க/எழுத தெரிந்திருக்க வேண்டும். 2. அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளியில் தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
| பெரிய சன்னதி சேமக்களம் மற்றும் இதர வாத்தியங்கள் | 1. தமிழில் படிக்க/எழுத தெரிந்திருக்க வேண்டும். 2. அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளியில் தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
| தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள் | 1. தமிழில் படிக்க/எழுத தெரிந்திருக்க வேண்டும். 2. அங்கீகரிக்கப்பட்ட இசைப் பள்ளியில் தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
| உதவி யானைப்பாகன் | 1. தமிழில் படிக்க/எழுத தெரிந்திருக்க வேண்டும். 2. யானைக்குப் பயிற்சி அளித்து கட்டுப்படுத்தும் திறன் மற்றும் மொழியைப் பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும். |
| சலவையாளர் | தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். |
| கூட்டுபவர் | தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். |
சம்பள விவரங்கள்
| பதவி (Post) | மாதச் சம்பளம் (Salary Range) |
| இளநிலை உதவியாளர் | ரூ. 18,500 – ரூ. 58,600 |
| கூர்க்கா | ரூ. 15,900 – ரூ. 50,400 |
| திருவலகு | ரூ. 15,900 – ரூ. 50,400 |
| கால்நடை பராமரிப்பாளர் | ரூ. 15,900 – ரூ. 50,400 |
| பெரிய சன்னதி உடல் | ரூ. 18,500 – ரூ. 58,600 |
| பெரிய சன்னதி வீரவண்டி | ரூ. 18,500 – ரூ. 58,600 |
| பெரிய சன்னதி சேமக்களம் மற்றும் இதர வாத்தியங்கள் | ரூ. 18,500 – ரூ. 58,600 |
| தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள் | ரூ. 18,500 – ரூ. 58,600 |
| உதவி யானைப்பாகன் | ரூ. 11,600 – ரூ. 36,800 |
| சலவையாளர் | ரூ. 11,600 – ரூ. 36,800 |
| கூட்டுபவர் | ரூ. 10,000 – ரூ. 31,500 |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025
எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை “https://srirangamranganathar.hrce.tn.gov.in/” ஆகிய இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு இணை ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006 என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை ஆட்டையிடனும், அஞ்சல் உறையிடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.