அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி! நாமக்கல்லில் தொண்டர்கள் ஆரவாரம்
நாமக்கல்லில் அஇஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு த.வெ.க கொடியுடன் ஏராளமான தொண்டர்கள் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாமக்கல் ஏ.எஸ் பேட்டை சில்ரன்ஸ் பார்க் பார்க் பள்ளி அருகே அஇஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு ஏதாவது பெரிய திட்டத்தை கொண்டு வந்ததா திமுக அரசு. அதிமுக ஆட்சியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம். சட்ட கல்லூரி கொண்டு வந்தோம். குடிநீரில் மலம் கலந்த அரசு திமுக அரசு. பொம்மை முதல்வர் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார். 202 ல் அதிமுக ஆட்சி மலர வாய்ப்பு தர வேண்டும். இந்த ஆட்சியில் கொலை கொள்ளை நடந்து வருகிறது. போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. உரிய பாதுகாப்பு கொடுத்து இருந்தால் 41 பேர் உயிரிழந்து இருப்பார்களா. எதிர் கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. 2016 தேர்தலில் திமுக டெபாசிட் கூட வாங்காது. தமிழகத்தில் உள்ள பல மாநகராட்சி யில் ஊழல் நடந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.