×

கோவை கொடூரத்திற்கு பலியான 10 வயது சிறுமியின் உடல் தகனம்!

 

கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கார்த்தி என்பவனையும், அவனுக்கு உதவியாக இருந்த மோகன்ராஜ் என்பவனையும் போலீசார் கைது செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுமியின் உடல் நேற்று மாலை அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பருத்தி காடு வீட்டுக்கு மாலை 5 மணிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு உறவினர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.இறுதிச் சடங்குகள் முடித்து 6 மணிக்கு அருகிலுள்ள பொதுப்பணி நலத்துறை நிலத்தில் கேஸ் சிலிண்டர் வைத்து உடல் எரிக்கப்பட்டது. எங்க பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம் இனி யாருக்கும் நிகழக்கூடாது என உறவினர்கள் கண்ணீர் மல்க கதறி அழுதனர்