×

தமிழக அரசியல் பரபரப்பு : தவெகவுக்கு தாவிய காங்கிரஸ் பொதுச்செயலாளர்..!!

 

கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேஜி ரமேஷ்குமார் இன்று அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் கே.ஜி. ரமேஷ்குமார், அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இவர், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளராக இருந்தார். காங்., சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததில், ரமேஷ்குமார் மீது 22 வழக்குகள் உள்ளன. காங்கிரசில் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை நடந்தபோது, இவர் தமிழகத்தில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்தார். சட்டசபை தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட, 'சீட்' கேட்டார்.

ஆனால், கேரள மாநில கிறிஸ்துவ பிஷப்புகளின் பரிந்துரையில், பிரவீனுக்கு 'சீட்' கிடைத்து; அவரும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாகி விட்டார்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் இருந்த, ரமேஷ்குமார், காங்.,கில் இருந்து விலகி, த.வெ.க., பொதுச்செயலரும், அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.