×

#BREAKING மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன்
 

 

திருமண மோசடி புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அடுத்தகட்டமாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் திருமண மோசடி புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் தனது வயிற்றில் வளரும் கருவை கலைக்குமாறு துன்புறுத்தியதாக புகாரில் ஜாய் கிரிசில்டா குற்றஞ்சாட்டி இருந்தார்.

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் பேரில் திருமண மோசடி புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா இருவரும் நாளை ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.