மக்களே உஷார்..!! இன்றும், நாளையும் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!
வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நேற்று லேசான மழை பெய்தது.
இந்நிலையில், தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல்பகுதிகளில், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், வரும் 26ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்றும், நாளையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார். திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 26ம் தேதி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.