“கூலி வாங்கி வாங்கி என் கை சிவந்தே விட்டது! விஜய்யை நான் எதிர்க்கவே இல்லை..”- சீமான்
நாங்கள் விஜயை எதிர்க்கவில்லை, சில கேள்விகளை முன் வைக்கிறோம், அவ்வளவு தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
முத்துராமலிங்க தேவரின் புகழ் போற்றும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் சீமான் தலைமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய சீமான், “வரலாற்றில் பல துப்பாக்கிச்சூட்டுக்கள் மறைக்கப்பட்டு விட்டன. இப்பொழுது ஒருவரை பார்க்க சென்று செத்தவர்களை பற்றி பேசுபவர்கள், ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைப் பற்றி பேசாததை போல. ஜாலியன்வாலாபாக் படுகொலை பற்றி பேசுபவர்கள், பெருங்காவல் நல்லூர் போராட்டத்தை பதிவு செய்யவில்லை என கூறி கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி விமர்சனம். மரத்தைக் கட்டிபிடித்து பேசுகிறார், மரத்திற்கு ஓட்டா இருக்கிறது என்கிறார்கள். ஆடு, மாடு உடன் பேசுகிறார், அவைகளுக்கும் ஓட்டா இருக்கிறது என்கிறார்கள்.தண்ணீருக்கு மாநாடு போடுகிறார் தண்ணீருக்கு ஓட்டா இருக்கிறது என்று கேட்கிறார்கள். தண்ணீருக்கு ஓட்டு இல்லை, ஆனால் தண்ணீர் குடிக்கும் நாய்க்கு ஓட்டு இருக்கிறது. எதையாச்சும் பண்ணியாச்சு காப்பாத்திடலாம் என்று தான் பேசுகிறேன்.
மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் என தெரிந்தும், 60 ஆண்டுகளாக சரி செய்யாமல் இருக்கும் கேடுகெட்ட ஞானம் கொண்டவர்கள் உள்ளனர். அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு இந்தி எதிர்ப்பார்கள். அதிகாரத்திற்கு வந்த பிறகு தீபாவளிக்கு இந்தியில் வாழ்த்து தெரிவித்து ஸ்வீட் தருவார்கள். எந்த பக்கம் காசு வாங்கி எங்கிட்டு வைக்கிறது என்ற குழப்பத்தில் இருக்கிறேன். பாஜகவை எதிர்த்தேன் நான் கிருஸ்துவ, இஸ்லாமிய கைக்கூலி என சொன்னார்கள். எனக்கு இரண்டு பேரும் ஒரு ஓட்டு கூட போடவில்லை, சல்லி காசு கூட கொடுக்கவில்லை. ஆனால் திமுகவுக்கு வாக்களித்தார்கள். திமுகவை எதிர்த்தால் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கைக்கூலி என்கிறார்கள். நான் கூலி வாங்கி வாங்கி கை சேவந்துவிட்டது. ஆனால் நாங்கள் விஜயை எதிர்க்கவில்லை. சில கேள்விகளை முன் வைக்கிறோம், அவ்வளவு தான். பதில் தெரிந்தால் சொல்ல வேண்டும், இல்லையெனில் போக வேண்டும் அதை விட்டு எங்களை எதிர்க்கிறார்கள் என பேசுகிறார்கள். அவ்வளவு பெரிய ஆள் கிடையாது. என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரி இல்லை, நான் எதிர்ப்பவர்களே எனக்கு எதிரி. என் நண்பனாக இருக்க எந்த தகுதியும் தேவையில்லை, ஆனால் எதிரியாக இருக்க தகுதிகளை வளர்த்துக் கொண்டு வர வேண்டும். திமுக கைக்கூலி என்று பேசுபவர்கள் உண்மையில் என்னிடம் வந்து காசு கொடு எனக் கேட்டவர்களே. கணம் போலீசார் அவர்களே, நேரம் சற்று ஐந்து நிமிடம் கூடுதலாக போய்விட்டது, இதற்கெல்லாம் வழக்கு போட்டு தேர்தல் நேரத்தில் அலைகழிக்க வேண்டாம்” என போலீசாரிடம் வேண்டுகோள் வைத்து கூட்டத்தை முடித்துக்கொண்டார்.