×

"மே 4ஆம் தேதிக்கு பின்னர் எடப்பாடி போட்ட பிளான் இது தான்.."- சவுக்கு சங்கர்

 

இந்த ஆட்சி நல்லா இருக்க கூடாது என திமுக, அதிமுக இரண்டும் நினைக்குது. கரெண்ட் கட் பண்ணுவாங்க.. ப்யூஸ் புடுங்குவாங்க.. ஒயரை கட் பண்ணுவாங்க.. இதெல்லாம் சமாளிக்க முதல்வர் விஜய்க்கு அவகாசம் தரனும் என ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “இந்த ஆட்சி நல்லா இருக்க கூடாது, நாசமாக போகவேண்டும் என திமுக, அதிமுக இரண்டும் நினைக்குது. கரெண்ட் கட் பண்ணுவாங்க.. ப்யூஸ் புடுங்குவாங்க.. ஒயரை கட் பண்ணுவாங்க.. மின்வாரிய தொழிலாளர்களை தூண்டிவிட்டு வேலைநிறுத்த போராட்டத்தை ஈடுபட செய்வாங்க... இதெல்லாம் சமாளிக்க முதல்வர் விஜய்க்கு அவகாசம் தரனும்.

மே 4ஆம் தேதிக்கு பின்னர் எடப்பாடி போட்ட பிளான் இது தான்... திருமாவளவன் முதலமைச்சர் என்று சொன்னதும் எடப்பாடி டென்ஷன் ஆனார். திருமாவளவன் முதல்வராக்கவா நான் கட்சி நடத்துகிறேன். ஒன்னு நான் முதல்வராக வேண்டும், இல்லையெனில் யாருமே முதல்வராக கூடாது எனக் கூறினார். இந்த கட்சியே வீணாபோனாலும் பரவாயில்லை திருமாவளவன் முதல்வராக்க விடமாட்டேன் என இபிஎஸ் கூறினார். இதற்கு பிறகு இபிஎஸ் இடம் என்னதாயா வேணும் உனக்கு? திமுகவின் ஆதரவோடு நீங்க முதல்வராகிறீர்கள் என்றால் சாலையில் செல்லும் மக்கள் கல் எடுத்து அடிக்கமாட்டார்களா? என சிவி சண்முகம் கைக்கலப்பில் ஈடுபட்டார். த.வெ.க ஆட்சி 3 மாதத்தில் கவிழும் என்று தி.மு.க - அ.தி.மு.க சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், ஒரு வேளை த.வெ.க ஆட்சி கவிழ்ந்து மீண்டும் தேர்தல் நடந்தால் த.வெ.க 230 இடங்களில் வெல்லும்” என்றார்.