×

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

 

மண்டல பூஜைக்காக இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.

மண்டல பூஜைக்காக இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 14 ஆம் தேதி மகர பூஜை நடைபெறவுள்ளது, தினமும் ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். இதனையொட்டி ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே எரிமேலியில் உள்ள சாஸ்தா கோவிலில் பேட்டை துள்ளி இங்கிருந்து சபரிமலையை நோக்கி பயணிக்க துவங்கியிருக்கிறார்கள். ஐயப்ப பக்தர்கள் வருகை ஒட்டி சாஸ்தா கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் சோதனை நடத்தப்படுகிறது. 

கார்த்திகை மாதம் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு வந்து ஐயப்பனை வணங்கி செல்வதால் உடல் நோய், நொடிகள் இன்றி ஆரோக்கியமாக இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.