“மனோரமாவின் மகன் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடித்தவர்! அவரோட கடைசி ஆசை இதுதான்”
சென்னை தி.நகரில் உள்ள மெலோடி சாலைக்கு ஆட்சி மனோரமாவின் பெயர் வைக்க வேண்டும் என அவரது மகன் பூபதி ஆசை பட்டார் என உறவினர்கள் கூறியுள்ளனர்.
மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70.தமிழ் சினிமாவில் சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தமிழ் ரசிகர்களால் ஆச்சி என்று அன்போடு அழைக்கப்பட்ட நடிகை மனோரமா. அவரது ஒரே மகன் பூபதி இவர் உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி , அதன் பின்னர் சரணம் ஐயப்பா, தூரத்து சொந்தம் , குடும்பம் ஒரு கதம்பம் மற்றும் மணல் கயிறு என சுமார் 5 படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் இணைந்து ஒரே ரத்தம் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சென்னை தி நகரில் வசித்து வந்த அவர் சமீப காலமாக மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் இந்த நிலையில் இன்று காலை 10:40 மணியளவில் காலமானார். கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தாய் மனோரமா உயிரிழந்த நிலையில் அதே மாதம் இன்று அவரது மகன் பூபதி காலமானார் .அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.