இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான் - மாணிக்கம் தாகூர் கண்டனம்..!!
Jun 9, 2026, 10:19 IST
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
ஏழை பெண்களுக்கு மோடி பரிசு. உஜ்வாலா திட்டம்;பாஜகவின் மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகிறது. 2016-ஆம் ஆண்டு 12 சிலிண்டர்களுக்கு கொடுக்கப்பட்ட மானியம் கடந்த ஆண்டில் 9 சிலிண்டர்களாக குறைக்கப்பட்டது.
இன்று வெறும் 4 சிலிண்டர்களாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏழை பெண் 365 நாளும் சமைக்க வேண்டும்,மோடி அரசு வெறும் 4 முறை மட்டுமே மானியம் தருகிறது."சராசரி நுகர்வு 4 சிலிண்டர்தான்” என்று அரசு சொல்கிறது. உண்மை என்னவென்றால், ஏழை குடும்பஙகள் வாங்க வசதியில்லாததால் குறைவாக பயன்படுத்துகின்றனர், தேவை இல்லாததால் அல்ல, இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழைக்கப்பட்ட துரோகம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.