கரூர் கூட்ட நெரிசல்- 10 பேர் சிபிஐ விசாரணைக்காக ஆஜர்
கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் வேலுச்சாமி புரத்தில் உள்ள வணிகர்கள் 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர்கள் நேரில் ஆஜராகி உள்ளனர்.
கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சிபிஐ அதிகாரிகள் அப்பகுதியில் வணிகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது இதில் இன்று வேலுச்சாமிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஜவுளிக்கடை உரிமையாளர், செல்போன் கடை உரிமையாளர், மெக்கானிக் ஷாப் உரிமையாளர்,கறிக்கடை உரிமையாளர் என 10 பேர் தற்பொழுது சம்மனுக்கு சுற்றுலா மாளிகையில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். இரண்டு நாட்களாக வேலுச்சாமி புரத்தில் சிபிஐ அதிகாரிகள் 3டி லேசர் ஸ்கேனர் கருவியுடன் அப்பகுதியில் அளவிடும் பணியானது சுமார் 700 மீட்டர் தூரம் நடைபெற்றது. இன்று சிபிஜ அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நபர்களை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.