கலைஞர் நூற்றாண்டு பூங்கா மூடல்- மக்கள் அதிர்ச்சி
கனமழை காரணமாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா அக்.15 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை செயல்படாது என தோட்டக்கலைத் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபதத்தில் சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடம் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை தமிழக அரசு அமைத்தது. மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற கலைஞர் நூற்றாண்டு பூங்கா அக்.15 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை செயல்படாது என தோட்டக்கலைத் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வடதமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கனமழை முதல் மிக
கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால் கலைஞர் நூற்றாண்டு பூங்கா மூடப்பட்டது.