×

#JUST IN : தமிழகத்தில் வந்தாச்சு சிங்கப்பெண் அதிரடிப்படை: துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்..!!

 

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (ஜூன் 09) மாலை 5 மணிக்கு முதல்வர் விஜய் துவக்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் விஜய்க்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். 

 

மகளிர், சிறுமியர் பாதுகாப்புக்காக, காவல் துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இப்படைக்கு, ஐ.ஜி.,யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார்.இதை தொடர்ந்து, நவீன், திவ்யதங்கம் ஆகிய இரண்டு எஸ்.ஐ.,க்கள் உட்பட, 18 போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தகவல் தொழிநுட்ப பூங்காக்கள் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்று வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்கவிழாவில் முதலமைச்சர் விஜயிடம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை ஐ.ஜி. பவானீஸ்வரி பெற்றுக் கொண்டார்.

சென்னையில் நடைபெறும் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டுள்ளார்.