×

#JUST IN : மக்களுக்கு அடுத்த ஷாக்..!! ஒரே நாளில் சவரனுக்கு 2,080 அதிகரிப்பு..!!

 
சேமிப்பின் அடையாளமாகத் திகழும் தங்கத்தின் விலை உயர்வால் வாங்க முடியாமல் தவித்த சாமானிய மக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு, தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்தது சற்று ஆறுதல் தருவதாக இருந்தது. 
இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.21) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,080 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹260 உயர்ந்து ₹12,180-க்கும், சவரன் ₹94,440-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.190 ஆக விற்பனையான நிலையில், இன்று ரூ.188 ஆக விற்பனையாகிறது.ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது