×

#JUST IN : தமிழக முதல்வர் மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை..!!

 

மனைவியின் மறைவுக்குப் பிறகு முத்துக்காளை வெளியிட்டுள்ள புதிய வீடியோ தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் அவர், "என்னுடைய மனைவி இறந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த நேரத்தில் நான் வீடியோ வெளியிட காரணம், என்னுடைய மனைவிக்காக நான் ஒரு வீடியோ வெளியிட்டேன். அதை பார்த்ததும் முதலமைச்சர் உடனே ஆக்சன் எடுத்தார். அவருக்கு ரொம்ப நன்றி.

தீவிரமான சிகிச்சைகள் நடந்த பிறகும் என்னுடைய மனைவி என்னை விட்டு பிரிந்தது துரதிஷ்டம்தான். ஆனாலும் எனக்கு கஷ்டம் என்றதும் ஆதவ் அர்ஜுனா பேசினார், ராஜ்மோகன் நேரில் வந்து ஆறுதல் சொன்னார். அவர்களுக்கும் ரொம்ப நன்றி" என்று உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் முத்துக்காளைக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.