×

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறையா? தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை!

 

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் சனி (அக்டோபர் 18) மற்றும் ஞாயிறு (அக்டோபர் 19) என்பதால், வழக்கமான வார இறுதி விடுமுறையுடன் சேர்த்து இந்த ஆண்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இந்த சூழ்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) கூடுதலாக அரசு விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் வலுத்துள்ளது. 

தீபாவளி முடிந்ததும் அக்டோபர் 20 இரவு அல்லது 21 காலை சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பிச் செல்ல மக்கள் திட்டமிட்டுள்ளதால், பேருந்து மற்றும் ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகின்றன.

இதனால், கடைசி நேரத்தில் திட்டமிடுபவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டால், பண்டிகைக்குப் பின் ஊரில் இருந்து திரும்புவோரின் சிரமம் குறையும் என மக்கள் கருதுகின்றனர். இதுபோல், கடந்த ஆண்டுகளிலும் தீபாவளிக்கு முன்னோ அல்லது பின்னோ அரசு ஒரு நாளை கூடுதலாக விடுமுறை வழங்கி, அதன் ஈடாக வேறொரு சனிக்கிழமையை வேலை நாளாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் அதேபோல செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அரசு விடுமுறை விடப்படும் வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.