×

ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு - திமுகவில் இணைந்த ஒரே மாதத்தில் வைத்திலிங்கம் தப்பியது எப்படி?

 

திமுகவில் இணைந்த ஒரே மாதத்தில் வைத்திலிங்கம் மீதான லஞ்ச வழக்கை முடித்து வைத்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.

2011- 2016 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது ஒரத்தநாடு திமுக எம்.எல்.ஏவாக இருக்கும் இவர், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு பதியப்பட்டது. கடந்த 2024 செப்டம்பர் 24ஆம் தேதி திமுக ஆட்சியில் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், வைத்திலிங்கம் கடந்த ஜனவரி 21ஆம் தேதி திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 25ல் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு முடித்து வைக்கப்பட்டது. வைத்திலிங்கம் மீதான லஞ்ச வழக்கு முடித்து வைக்கப்பட்டதை கடந்த ஜூன் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம், திமுகவில் இணைந்ததற்கு பலனாக லஞ்ச வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.