சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்துதீபாவளி பண்டியை ஒட்டி சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வருகிற 20.10.2025 அன்று திங்கட்கிழமையன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக இரண்டு நாட்கள் முன்னதாகவே பெரும்பால மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி தங்களது சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால் சென்னை போரூர் சுங்கச்சாவடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுங்கச்சாவடி முதல் மதுரவாயல் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதேபோல் கோயம்பேடு - மதுரவாயல், வானகரம் - மதுரவாயல், தாம்பரம் புறவழி சாலை என அனைத்து பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என போலீசாருக்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.