சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை- போக்குவரத்து துண்டிப்பு
சேலத்தில் நேற்று நள்ளிரவில் கொட்டி தீர்த்த மலையால் சிவதாபுரம் பகுதியில் உள்ள ரயில்வே கீழ்பாக்கம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகர் முழுதும் கடந்த சில தினங்களாகவே இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது . கடந்த ஆறாம் தேதி சேலத்தில் நள்ளிரவில் 11 சென்டி மீட்டர் அளவில் மழை கொட்டி தீர்த்தது அதனை எடுத்து தினந்தோறும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மேல பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் கனமழையாக கொட்டியது. சேலம் டவுன், பள்ளப்பட்டி , ஜங்சன் , சூரமங்கலம் , சிவதாபுரம் , திருமலைகிரி. ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் நள்ளிரவில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சேலம் சிவதாபுரம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சிவதாபுரம் சேலத்தாம்பட்டி , பனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சேலத்திலிருந்து இளம்பிள்ளை, சிவதாபுரம் செல்வதற்காக அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கியதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. திருச்சியில் இருந்து மருந்து பொருள் ஏற்றி வந்த மினி லாரி சுரங்க பாதை வெள்ள நீரில் சிக்கி கொண்டது. லாரி முழுவதும் தண்ணீர் நிரம்பியதால் லாரியை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த சந்தோஷ்குமார் என்ற ஓட்டுநர் விடிய விடிய வாகனத்தின் மீது ஏறி நின்று தண்ணீரில் தவித்தார். தண்ணீர் சற்று வடிந்ததால் இன்று காலை தான் அவர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்தார். இந்நிலையில் சுரங்கப்பாதை சாலையை யாரும் கடக்காத வண்ணம் கண்டெய்னர் லாரி மூலம் சாலையை மறைத்து வைத்துள்ளனர். வருவாய்த் துறையினர் , மற்றும் காவல் துறையினர் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.