×

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி பாராட்டு

 

தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என தமிழ்நாடு அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சேலத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "மழைப் பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன். தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது.  வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. எதிர்பார்த்ததை போல அடுத்த 2 நாளுக்கு மழைப்பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். அனைத்து விதமான சாத்தியமான வழிகளை அரசு செய்து வருகிறது" எனக் கூறினார்.