×

குட் நியூஸ்..! 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான காத்திருப்பு நேரம் மேலும் குறைப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..!

 

தமிழ்நாட்டில் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதற்கான காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதிக விபத்துகள் நடக்கும் இடங்கள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட இடங்கள், குடிசைப் பகுதிகள் போன்றவை ஹாட் ஸ்பாட்டுகளாக கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கையாக 108 ஆம்புலன்ஸ்-கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் கட்டளை மையத்திற்கு அழைப்புகள் வரும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தை அணுகிட வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்தை தெரிவித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் 5 நிமிடங்களிலும், செங்கல்பட்டு, கடலூரில் 7 நிமிடங்களிலும், பிற மாவட்டங்களில் 8 நிமிடங்களிலும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பெற முடியும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.