×

தனியார் பள்ளியில் வாயுக் கசிவு-  35 மாணவிகள் மயக்கம்!

 

தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டதால்  மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் (விக்டரி) பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் 35 மாணவிகள் மயக்கமடைந்தனர். உடனடியாக மீதமிருந்த மாணவ, மாணவிகள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மயக்கமடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர் குற்றச்சாட்டை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

இதனிடையே சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். அம்மோனியா கசிவு ஏற்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய பள்ளி ஆய்வகத்திற்கு ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வருகை புரிந்துள்ளனர்.