×

பட்டாசு வெடித்து பயங்கர தீ விபத்து! விருதுநகரில் சோகம்

 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பட்டாசு வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இனிப்புகள் செய்து தங்களது உறவினர்களுக்கு பறிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அயோத்தியில் 25 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி தீபாவளி கொண்டாட்டப்பட்டது. விண்ணை முட்டும் இசை முழக்கங்களுடன் மக்கள் ஆரவாரம் செய்தனர். இது ஒருபுறம் இருக்க தீபாவளி பண்டிகை காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது.


இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அச்சம்பட்டி பகுதியில் பட்டாசு வெடித்ததில் கழிவு அட்டை மீது விழுந்த தீப்பொறியால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அச்சம்பட்டி பகுதி முழுவதும் புகை மண்டலமானது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.