“ஆபத்தில் குழந்தை- போலீசை அழைத்தும் உதவிக்கு வரவில்லை” கதறும் அப்பா... சென்னையை உலுக்கிய பேரதிர்ச்சி சம்பவம்
8 வயது மகனுக்கு கஞ்சா போதை இளைஞர்கள் சிலர் உடல் ரீதியான துன்புறுத்தல் அளித்ததாக சினிமா இணை இயக்குநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் 8 வயது மகனுக்கு கஞ்சா போதை இளைஞர்கள் சிலர் உடல் ரீதியான துன்புறுத்தல் அளித்ததாக சினிமா இணை இயக்குநர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரிடம் இணை இயக்குநராக பணியாற்றி வரும் அவர், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனது மகன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, நான் சற்று தள்ளி நடைபயிற்சியில் இருந்தேன். அப்போது 2 பேர் மகனிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். அதனை நான் தடுக்க முயன்றபோது மேலும் பலர் என்னை சூழ்ந்து கொண்டனர். காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு அழைத்தபோது, அழைப்பு எடுக்கப்பட்டு உடனே அணைக்கப்பட்டது. R6 குமரன் நகர் காவல்நிலையத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது எண் உபயோகத்தில் இல்லை என வந்தது. உதவி எதுவும் கிடைக்கவில்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உயிர் பாதுகாப்பில்லாத சூழலில் இறுதிவரை காவல்துறை தொடர்பு கிடைக்கவே இல்லை. எந்தவித அசம்பாவிதமும் இன்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான்... என பதிவிட்டுள்ளார்.. தொடர்பு எண்ணை Direct message மூலம் தெரிவிக்குமாறும் தேவையான உதவி செய்து தரப்படும் என காவல்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.