“ஒரு ஓட்டை நீக்க ரூ.80 கொடுத்துள்ளனர்”- பாஜக மீது ஜோதிமணி புகார்
கர்நாடகாவில் ஒரு ஓட்டை நீக்குவதற்காக 80 ரூபாயை கம்பெனி ஒன்றுக்கு கொடுத்தது தெரியவந்திருக்கிறது. அந்த 80 ரூபாயை யார் கொடுத்து இருப்பார்கள்? நிச்சயமாக பாஜகதான் கொடுத்து இருப்பார்கள் என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி குற்றஞ்சாட்டினார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஏன் SIR-ஐ திணிக்கிறீர்கள்? பாஜகவிற்காக தேர்தல் ஆணையம் திட்டமிட்டு தேர்தல் முறையை சீரழித்துக் கொண்டிருக்கிறது. பீகாரில் நடந்த SIR-க்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வராதபோது தமிழ்நாட்டில் ஏன் இவ்வளவு அவசரமாக SIR-ஐ கொண்டு வருகிறீர்கள்? அசாமில் SIR-ஐ நீங்கள் கொண்டுவரவில்லை. ஆனால் தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் SIR-ஐ கொண்டு வருகிறீர்கள்? நாங்கள் ஒன்றும் SIR-ஐ கேட்கவில்லையே.. தேர்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அங்கமாக மாறிவிட்டார்கள். கர்நாடகாவில் ஒரு ஓட்டை நீக்குவதற்காக 80 ரூபாயை கம்பெனி ஒன்றுக்கு கொடுத்தது தெரியவந்திருக்கிறது. அந்த 80 ரூபாயை யார் கொடுத்து இருப்பார்கள்? நிச்சயமாக பாஜகதான் கொடுத்து இருப்பார்கள்” என்றார்.