×

கர்ப்பம் தெரிந்து வீட்டில் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை

 

திருவள்ளூர் அருகே நயப்பாக்கத்தில்  5 மாதம்  கர்ப்பமாக இருந்ததை  பாட்டி திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளுர் அடுத்த நயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லுரி மாணவி பாரதி (19). இவர் உறவுக்கார இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்ததால் கர்ப்பம் தெரிந்து வீட்டில் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலைபாரதி 5 மாதம் கர்ப்பமாடைந்துள்ளர். சிறிய வயதிலேயே தாய், தந்தை இழந்த பாரதி பாட்டி அரவணைப்பில் வசித்து வருவதால் இது தொடர்பாக பாட்டிக்கு இந்த விஷயம் தெரிய வந்ததால் பாட்டி திட்டியதாக தெரிகிறது.

இதனால் பாரதி, பாட்டியின் 40க்கும் மேற்பட்ட பிபி மாத்திரைகள் உட்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்  சிகிச்சை பலனின்றி பலியானார். இது தொடர்பாக மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.