தவறான செய்தி... எம்சாண்ட், ஜல்லி, பிசாண்ட் மற்றும் குண்டுக்கல் விலை உயரவில்லை என விளக்கம்
எம்சாண்ட், ஜல்லி, பிசாண்ட் மற்றும் குண்டுக்கல் விலையை கணிசமாக உயர்ந்து இருப்பதாக வெளியான தகவல் உண்மைக்கு புறமானது என்று கல் குவாரி மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு ஜல்லி தேவை – 50,000 முதல் 60,000 லோடுகள், எம்-சாண்ட் தேவை – 60,000 முதல் 70,000 லோடுகள். தமிழ்நாட்டில் 40,000 லோடுகள் வரை. தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 20,000 லோடு கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது. ஜல்லி, எம்-சாண்ட் போன்ற அடிப்படை கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. கட்டுமான பணிகளுக்கு தேவையான கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலை ரூ.200 வரை உயர்ந்ததாகவும் செய்திகள் வெளியானது. இதன் காரணமாக கட்டிடம் கட்டும் செலவு சதுர அடிக்கு ரூ.100 வரை கூடும் அபாயம் இருப்பதாக கட்டுமானத் துறையினர் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் எம்சாண்ட், ஜல்லி, பிசாண்ட் மற்றும் குண்டுக்கல் விலையை கணிசமாக உயர்ந்து இருப்பதாக வெளியான தகவல் உண்மைக்கு புறமானது என்று கல்குவாரி மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு நிர்ணயித்தபடி ஜல்லி 4000, எம்சாண்ட் 5000, பி சாண்ட் 6000க்கும் தான் விற்பனை செய்யப்படுகிறது என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது