×

இன்று முதல்வர் விஜய் - அன்புமணி சந்திப்பு.. புது கூட்டணி உருவாகிறதா..??

 

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் கடந்த 5-ம் தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்து கட்சிகள் மற்றும் சமுதாய தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் 2008-ம் ஆண்டின் புள்ளி விவரங்கள் சேக ரிப்பு சட்டத்தின்படி சமூகநீதி கணக்கெடுப்பு எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுகுறித்து முதல்-அமைச்சர் விஜய்யை விரைவில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, சென்னையில் முதல்-அமைச்சர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி இன்று காலை சந்தித்துப் பேசுகிறார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விஜய்யிடம் அன்புமணி அளிக்க உள்ளார்.