×

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு  நிதியுதவி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்

 

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தலை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கான ரூ.63,246 கோடி நிதி ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு நிதி பங்களிப்பின் மூலம் இரண்டாம் கட்ட திட்டம் செயல்படுவதால் தமிழ்நாடு அரசிற்கு சுமார் 34,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதி கிடைக்கும்.


இதுகுறித்து டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த சந்திப்பில் நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சென்னை மெட்ரோல் இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தமைக்காக மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி! தமிழ்நாட்டு மக்களின் நெடுநாள் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்டத்தைக் கூடிய விரைவில் நிறைவேற்றுவோம் என உறுதியாக நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.