#BREAKING: நாளை சென்னை உட்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!!
Updated: Oct 21, 2025, 21:39 IST
சென்னை மாவட்டத்தில் நாளை கனமழை கொட்டித் தீர்க்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
நாளை (அக்டோபர் 22) கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.