×

#BREAKING காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது!

 


வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்தது. 

 தெற்கு வங்கக்கடலின்  நேற்று முன்தினம் (15-10-2024) காலை மத்திய பகுதிகளில்   நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 05. 30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  பின்னர் நேற்று   (16-10-2024) காலை 8. 30 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும்,  புதுவைக்கு   கிழக்கு- வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. 

முதலில் மணிக்கு  6 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மின்னர் மெல்ல மெல்ல அதன் வேகத்தை அதிகரித்து பிற்பகலுக்கு மேல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகரத்தொடங்கி பின்னர் , நேற்று இரவு முதல் மணிக்கு 22 கி.மீ வேகத்தில் நகர்ந்தது.  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து  வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் - நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே இன்று 17-ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது. மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது.