×

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் இந்து ராம் ஆகியோரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் இந்து ராம் ஆகியோரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டிஜிபிக்கு அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் மூவரது வீடுகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. போலீசார் போயஸ் கார்டன் சென்று பார்த்தபோது எந்த வெடிபொருட்களும் சிக்கவில்லை. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுபோன்று விஷமச் செயலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் சென்னை கீழ்பாக்கம் சுப்பிரமணியன் தெருவில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விஷமச் செயலில் ஈடுபட்ட  மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் இந்து ராம் ஆகியோரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.