ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்ரீரங்கம் கோவில், நீதிமன்றம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு இன்று மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் நீதிமன்றம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அவை இன்று வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அரிகாட் வர்கீஸ் என்கிற பெயரில் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி காவல் துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு துறை அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியரின் கார் உள்ளிட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கக்கூடிய கார்கள் வாகனங்கள் உள்ளிட்டவற்றிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர் கூட்டம் நடைபெற்றதால் வெடிகுண்டு சோதனையின் போது பரபரப்புடன் காணப்பட்டது. அதே போல ஸ்ரீரங்கம் ரங்கநாதர கோவிலிலும் கோவிலுக்க்கு வரும் பக்தர்களின் உடமைகள், கோவிப் வளாகத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதயில் ஈடுபட்டனர். இதேபோல் முல்லைப்பெரியாறு அணையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவின் திருச்சூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.