தமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை- “Technical Fault” என்று முட்டுக் கொடுப்பது ஏன்?: வானதி சீனிவாசன்
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே நீங்கள் துணை முதல்வரா அல்லது தமிழின எதிர்ப்பாளரா? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
1.நீங்கள் பங்கேற்கும் விழாவில் நமது தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடுவதைக் கூட உறுதிசெய்ய தவறிய உங்களுக்கு துணை முதல்வராக நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது?
2.இதுதான் நீங்கள் தமிழ் மொழியைக் கட்டிக் காக்கும் லட்சணமா?
3.தவறாகப் பாடுவது காணொளியில் தெளிவாக தெரியும் போது, செய்த தவறை மறைக்க “Technical Fault” என்று புது விதமாக முட்டுக் கொடுப்பது ஏன்?
4.ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுவிட்டது என கூறி தமிழக ஆளுநரின் மீது இனவெறி சாயத்தைப் பூசிய உங்கள் தகப்பனார், உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
5.தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாகப் பாடியதாக பொய்ப் புகார் கூறி ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசிடம் மல்லுக்கட்டினீர்களே, நீங்கள் பங்கேற்ற விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுள்ளதே, உங்கள் பதவி பறிக்கப்படுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.